கொலை செய்யப்படலாம் என அச்சம்: பிரித்தானியாவில் குடியேறுகிறார் ஆசியா பீவி?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆசியா பீவி மேற்குலக நாடுகளில் ஒன்றில் குடியேறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியா பீவிக்கு எதிராக கொலை மிரட்டல் இருப்பதால் அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி பிரித்தானியாவில் அடைக்கலம் கோரலாம் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்த 47 வயது ஆசியா பீவி அந்நாட்டின் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆசியா பீவிக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவியை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரை அழைத்துச் செல்வதற்காக பிரித்தானியாவில் இருந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனால், அவர் நாட்டைவிட்டுச் சென்றால் அவருக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகள் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.

ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது. மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டங்களில் ஈடுபட்டு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர்.

போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. பஞ்சாப் மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டன. செல்போன் சேவை, இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers