கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் கிடந்த இளம்பெண் சடலம்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வட கிழக்கு உக்ரைனில் இளம்பெண் ஒருத்தி கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் பள்ளிக்கு சென்ற Alisa Onyshchuk என்னும் 15 வயது மாணவி ஒருவர் திடீரென காணாமல் போனார்.

அவ்வழியே நடந்துபோன அவளது தாயார் தனது மகளின் காலணி தனியாக கிடந்ததைக் கண்டு கல்லூரிக்கு சென்று விசாரிக்க, அவர் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

பொலிசார் உள்ளூர் மக்கள் துணையுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, 24 மணி நேரத்திற்குப்பின் காட்டுப்பகுதியில் சூறையாடப்பட்ட Alisaவின் உடலைக் கண்டனர்.

அவளைச் சுற்றிலும் கழுத்தறுக்கப்பட்ட கோழிகளின் உடல்கள் கிடந்ததோடு, அவள் முகம் முழுவதும் இரத்தமாக காணப்பட்டது.

பிரேத பரிசோதனையில் Alisa வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கழுத்து நெறித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்