20 அடி உயரத்தில் இருந்து முகம் குப்புற விழுந்த பச்சிளம் குழந்தை... அலறிய டாக்ஸி சாரதி: நெஞ்சை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்காட்லாந்து நாட்டின் டன்டி பகுதியில் குடியிருப்பு ஒன்றின் முதல் மாடியில் இருந்து பச்சிளம் குழந்தை முகம் குப்புற விழுந்த சம்பவம் பார்வையாளர்களை கதற வைத்துள்ளது.

குறித்த 2 வயது குழந்தை முகம் குப்புற விழுவது கண்டு அதிர்ச்சியில் உறைந்த டாக்ஸி சாரதி ஒருவர் வாய்விட்டு அலறியுள்ளார்.

டன்டி நகரிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நேற்று காலை நடந்துள்ளது. பாப்பி மோரிசன் என்ற அந்த குழந்தை விழுந்த அதிர்ச்சியில் நினைவற்று கிடந்துள்ளது.

சில நிமிடங்களுக்கு பின்னர் குழந்தையின் தந்தை ஷான் ஃபெர்ரி சம்பவப் பகுதிக்கு வந்ததாகவும், முகம் குப்புற விழுந்து கிடந்திருந்த குழந்தையை அள்ளிச் சென்றதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பின்னர் ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து வந்ததாகவும், அது பின்னர் Ninewells மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குழந்தை மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி சாரதி அலறியதாகவும், அதில் பயணம் செய்த பெண்மணி ஒருவரே 999 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் அந்த பிஞ்சு குழந்தை கந்தல் துணி பொம்மை போன்று கிடந்துள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர் என கூறப்படுகிறது. ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்