குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் சடலம்: 18 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான கொலை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

குரோசிய நாட்டில் குளிர்சாதன பெட்டியில் மறைவு செய்யப்பட்ட பெண்ணின் உடலை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

18 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானதாக கூறப்பட்ட பெண், குளிர்சாதன பெட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அந்த பெண்ணின் சகோதரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜாஸ்மினா டொமினிக் என்ற இளம்பெண் மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் கடந்த 2000 ஆண்டில் இருந்தே மாயமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டொமினிக்கின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி ஒன்றில் இருந்து அவரது சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

திடீரென்று சில மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், அழுகிய வாடை எழுந்துள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து சோதனையிட்டுள்ளனர்.

இதில் மாயமான ஜாஸ்மினா டொமினிக்கின் சடலம் மறைவு செய்துள்ளதை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

இந்த விவகாரம் குரோசியா நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தை மறைத்து வைத்துக் கொண்டு கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பம் எவ்வாறு குடியிருந்து வந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers