நாட்டை விட்டு செல்கிறேன்: நியூசிலாந்திலிருந்து கனத்த இதயத்துடன் ஒலித்த ஒரு அகதியின் குரல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தனது தந்தை மற்றும் சகோதரனை இழந்த 13 வயது சிரிய அகதி சிறுவன் நாட்டை விட்டு செல்வதாக தெரிவித்துள்ளது வலியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர், தங்களுக்கு இதுவரை அடைக்கலம் கொடுத்த நியூசிலாந்து நாடு எங்கள் கூடு, இந்நாட்டை விட்டு நாங்கள் ஒருபோதும் செல்லமாட்டோம் என துப்பாக்கி சூடு நடந்த மசூதியின் மதகுரு தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் நியூசிலாந்து மக்கள் தங்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்கிறார்கள் என தெரிவித்தனர். ஆனால், 13 வயது சிரிய அகதி சிறுவன், நியூசிலாந்து நாட்டை விட்டு செல்லப்போவதாக கூறியுள்ளது அவனது உண்மையான மனவேதனையை காட்டுகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த ஆண்டு யூலை மாதம் Zaid Mustafa - இன் குடும்பம் நியூசிலாந்துக்கு அகதியாக வந்துள்ளனர்.

மசூதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது Mustafa - ம் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் இருந்துள்ளார். ஆனால், துரதிர்ஷடவசமாச தந்தை Khaled Mustafa, சகோதரர் Hamza ஆகிய இருவரும் இறந்துவிட, கை மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுடன் Mustafa உயிர்தப்பியுள்ளார்.

உறவுகள் இருவரும் இறந்துவிட்ட நிலையில், நான் மட்டும் எதற்காக இங்கு தனியாக இருக்க வேண்டும் ,நான் நியூசிலாந்து நாட்டை விட்டு எனது சிரியா நாட்டுக்கு செல்கிறேன்.
சிரியாவில் நடைபெற்ற பயங்கர சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து தப்பித்து வந்த எனது குடும்பத்திற்கு இப்படி நடந்துவிட்டதே என கண்ணீர் சிந்தியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் Ali Akil கூறியதாவது, சிரியாவில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளான அவர்களது குடும்பம் நியூசிலாந்து பாதுகாப்பான இடம் என நம்பி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் குடும்பத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளதால் நியூசிலாந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்