12 வயது வித்தியாசம்.... அரண்மனை வாழ்க்கை: கோடீஸ்வர கணவரின் ரகசியத்தை அம்பலப்படுத்திய லண்டன் பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1303Shares

ஓமன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வர கணவர் தனக்கு தரவேண்டி ஜீவனாம்ச தொகையை முறையாக கொடுக்காத காரணத்தால் வழக்கு தொடர்ந்த மனைவி, தனது கணவரின் வருமானம் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

Al Zawawi (36) என்ற கோடீஸ்வர தொழிலதிபரை, 24 வயதான Hammoud திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்கள் கணவருடன் அரண்மனையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த வந்த Hammoud க்கு தனது கணவரின் அடக்குமுறைகள் பிடிக்காத காரணத்தால் அவரை விட்டு பிரிந்து லண்டன் சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காகவும், தனது எதிர்கால வாழ்க்கைக்காவும் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த விசாரணையில் 25 மில்லியன் பவுண்ட் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த தொழிலதிபர், பின்னர் இந்த தொகையை உனக்கு தர இயலாது என மனைவியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரின் சொத்து மதிப்பு 300 மில்லியன் பவுண்ட் என தெரியவந்ததையடுத்து இதுகுறித்த தகவலை அம்பலப்படுத்தி தனக்கு ஜீவனாம்சமாக 50 மில்லியன் பவுண்ட் வழங்க வேண்டும் என மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து Hammoud கூறியதாவது, எனது கணவருக்கு ஒரு வருடத்திற்கு மட்டும் 3.7 மில்லியன் பவுண்ட் வருமானம் வருகிறது. கட்டுமானம், சுற்றுலாதுறை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என மிகப்பெரிய குழுமம் நடத்தி வரும் கணவர் தனது சொத்துக்களை மறைத்துள்ளார்.

தன்னுடைய சொத்து மதிப்பு 34 மில்லியன் பவுண்ட் என போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்பது நீதிமன்ற விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பொய்யாக ஆவணங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக தொழிலதிபருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்