இதயத்தில் பாய்ந்த 12 அங்குல அம்பு: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
318Shares

இத்தாலியில் 12 அங்கு அம்பு இதயத்தில் துளைத்திருந்தபடியே வந்த நபருக்கு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இத்தாலியில் 47 வயதான நபர் ஒருவர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மோனினெட்டே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவரது இதயத்தில் ஆழமாக 12 அங்குல் அம்பு பாய்ந்திருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் அவர் நல்ல நினைவுடனே இருந்துள்ளார்.

பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அம்பு இடது வென்ட்ரிக்கிள் மற்றும் நுரையீரலை துளைத்திருப்பது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை செய்தால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக ரத்தம் வெளியேறி விடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த ஆபத்திற்கு மத்தியில் கூட, இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த அம்பினை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து உள்ளூர் ஊடகம், அவருடைய இதயத்தில் அம்பு எப்படி பாய்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்கள் கழித்து அந்த நபர் நல்ல நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்