அண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை! சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் அண்ணியை திருமணம் செய்து கொள்வதற்காக சொந்த அண்ணனை கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் அலீம். இவரின் மூத்த சகோதரர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சகோதரரின் மனைவியுடன் அலீமுக்கு தொடர்பு ஏற்பட்டது, இதையடுத்து இருருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

இந்நிலையில் சவுதியில் உள்ள சகோதரர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அலீம் தனது திருமணத்துக்கு அண்ணன் தடையாக இருப்பார் என கருதி அவரை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அண்ணணை சுட்டு கொன்றார் அலீம்.

இதனையடுத்து தனது குடும்பத்தாரிடம் சென்று, கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் தனது அண்ணனை சுட்டு கொன்றுவிட்டதாக நாடகம் ஆடினார்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கூடுதல் விபரங்களை அறிய பொலிசார் அலீமிடம் விசாரித்தனர்.

அப்போது அவரின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அண்ணனை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார், இதையடுத்து அலீமை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers