உலகையே உலுக்கிய மரணம்... நாடு திரும்பியது தந்தை மற்றும் மகளின் சடலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் குடியேற எல்லையை கடக்கயில் ஆற்றில் மூழ்கி ஒன்றாக பலியான தந்தை மற்றும் மகளின் சடலங்களை நல்லடக்கம் செய்ய சொந்த நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எல் சால்வடார் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகளின் புகைப்படமானது உலகமெங்கும் கடந்த வாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

மட்டுமின்றி புலம் பெயர்ந்தவர்கள் அமெரிக்க எல்லையை கடப்பது எத்துணை கடினம் என்பதை அந்த காட்சிகள் உலகிற்கு புரிய வைத்தது.

வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவுக்கும் அமெரிக்க மாகாணமான டெக்சாசுக்கும் இடையே உள்ள ஆற்றில் மூழ்கி இந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரது சடலங்களும் ஞாயிறு அன்று சாலை மார்க்கம் சொந்த நாடான எல் சால்வடாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திங்களன்று தனிப்பட்டமுறையில் இருவரது சடலங்களையும் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

சொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த 25 வயதான ஆஸ்கார் ஆல்பர்டோ மார்டினெஸ்,

இதன் ஒருபகுதியாக குடும்பத்துடன் அமெரிக்காவுக்குள் குடியேறி, பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதன்பொருட்டே மார்டினெஸ் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லையில் புலம் பெயர்ந்தவர்கள் சுமார் 283 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்