பானை போன்று பெரிதாகும் வயிறு: 19 வயது இளைஞரின் பரிதாப நிலை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியாவின் முஸாபர்பூர் நகரில் விசித்திர நோயால் 19 வயது இளைஞரின் வயிறு பானை போன்று பெரிதாகி வருவதால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்.

முஸாபர்பூர் நகரில் குடியிருக்கும் சுஜித் குமார் என்ற 19 வயது இளைஞரே விசித்திர நோயால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்.

7 வயது முதல் இவருக்கு இந்த நோய் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இவரது நோய் தொடர்பில் மருத்துவர்களால் என்ன காரணம் என்பதை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது.

குமார் தற்போது மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது இந்த விசித்திர நோய் காரணமாக பலராலும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

இந்த விசித்திர நோயால் அவதிப்படும் குமார் தமது தாயாரின் உதவியுடன் பல மருத்துவர்களை சந்தித்துள்ளார்.

ஆனால் இதுவரை அவர்களால் ஒரு தீர்வை எட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

ஒவ்வொருமுறையும் அப்போதைய வலிக்கான மருந்துகள் மட்டுமே மருத்துவர்களால் வழங்கப்படுவதாகவும், பூரண குணமடைய தேவையான சிகிச்சைகள் எதையும் வழங்கவில்லை என்றே தெரிவிக்கின்றனர்.

தற்போது தமது கிராமத்தில் இருந்து 622 மைல்கள் தொலைவில் இருக்கும் டெல்லி நகருக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால் பொருளாதார சூழல் காரணமாக டெல்லிக்கு செல்லும் நிலையில் தாங்கள் இல்லை என குமாரின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்