லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசை வென்ற நபர் வீட்டுக்கு இரவில் அடிக்கடி வந்த நபர்கள்.. வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு வென்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

யுத் வோங்தனம் (38) என்ற நபருக்கு கடந்தாண்டு லொட்டரியில் 3 கோடி பரிசு விழுந்தது.

இந்நிலையில் அவர் வீட்டுக்கு அதிகளவு ஆண்கள் இரவு நேரத்தில் வந்து செல்வதாக பொலிசுக்கு புகார் வந்தது.

இது குறித்து சோதனை செய்ய பொலிசார் யுத் வீட்டுக்கு சென்ற நிலையில் பொலிஸை பார்த்த அவர் வீட்டின் பின்பக்க வழியாக தப்பியோட முயன்றார்.

ஆனால் அவரை துரத்தி சென்று கைது செய்தனர், பின்னர் யுத் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் அதிகளவு இருந்ததும், அவர் சட்டவிரோதமாக அதை விற்று வந்ததும் தெரியவந்தது.

இதை வாங்கவே ஆண்கள் அவர் வீட்டுக்கு வந்துள்ளனர். லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் இன்னும் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு யுத் போதை மாத்திரைகளை விற்றது அவர் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்