கொடூர சுறாக்கள் பாதுகாக்கும் 1 பில்லியன் டொலர் நிதி: வெளிவரும் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

Jurassic Park தீவு என அறியப்படும் கோஸ்ட்டா ரிக்கா தீவு ஒன்றில் சுமார் ஒரு பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி, கொலைகார சுறாக்களால் காவல் காக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிதியானது பெரு நாட்டின் தலைநகரில் இருந்து 1820 ஆம் ஆண்டு இடம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிதிக் குவியலில் வெள்ளி நாணயங்கள், வைர கற்கள், தங்க கட்டிகள் மற்றும் தங்கத்திலான ஆளுயர கன்னி மேரி சிலை ஒன்றும் அதில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய மாலுமி வில்லியம் தாம்சன் தமது கப்பலில் இந்த நிதியை பாதுகாப்பாக இடம் மாற்றியதாகவும்,

ஆனால் கடற்கொள்ளையர்கள் அனைத்து ராணுவத்தினரையும் கொன்றுவிட்டு மொத்த நிதியையும் கோஸ்ட்டா ரிக்கா தீவுப் பகுதியில் மறைவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதில் இருந்தே நிதி வேட்டையாளர்களின் முக்கிய பகுதியாக கோஸ்ட்டா ரிக்கா தீவு மாறியுள்ளது.

ஒருமுறை இப்பகுதியில் உள்ள குகை ஒன்றின் வெண்கல சங்கிலியை இழுத்து அப்புறப்படுத்தியவர்களுக்கு குவியல் குவியலாக ஸ்பானிய தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது.

இருப்பினும் இப்பகுதியில் உள்ள கொலைகார சுறாக்களுக்கு அஞ்சி வேட்டைக் காரர்கள் எவரும் நெருங்குவதில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்