நெய்மர் மீது பாலியல் குற்றம் சுமத்திய மொடல் அழகிக்கு சிக்கல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் கூறிய பிரேசில் மொடல் அழகி மீது மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மே மாதம் பாரிஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும், பிரேசில் மொடல் அழகி நஜிலா டிரிண்டேட் பொலிஸில் ஒரு கற்பழிப்பு புகாரை பதிவு செய்தார். அதில், நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் ஹோட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போதிய ஆதாரம் இல்லை என கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து நெய்மர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் நேர்மையாக இருப்பேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லப் போவதில்லை. ஆனால், நிம்மதி என பதிவிட்டிருந்தார்.

இந்திய நிலையில் வியாழக்கிழமையன்று சாவ் பாலோ பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரேசில் மொடல் அழகி மீது மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவருடைய முன்னாள் காதலன் எஸ்டிவன்ஸ் ஆல்வ்ஸும் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மொடல் அழகி மீது வழக்கு பதிவு செய்யலாமா என்பது குறித்து ஒரு நீதிபதி முடிவெடுப்பார் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்