17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா! பதறவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சகோதரி அழகாக இருப்பதால் பொறாமை கொண்டு அவர் கண்ணை நோண்டி எடுத்து கொடூரமாக கொலை செய்த அக்காவுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எலிசவேடா துப்ரோவினா (22) என்ற இளம் பெண்ணும் அவர் சகோதரி ஸ்டெபானியா (17) என்பவரும் சிறு வயதிலிருந்தே அனாதை இல்லத்தில் வளர்ந்தார்கள்.

வளர்ந்த பின்னர் இருவரும் மொடலிங் துறையில் நுழைந்தார்கள்.

இந்நிலையில் தனது தங்கை ஸ்டெபானியா மிகவும் அழகான தோற்றத்தில் இருப்பதாக எலிசவேடாவுக்கு அவர் மீது பொறாமை ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த 2016-ல் ஸ்டெபானியாவை உடலின் பல இடங்களில் 189 முறை கத்தியால் குத்திய எலிசவேடா அவரை நிர்வாணமாக்கி கண்களை நோண்டி வெளியில் எடுத்ததோடு, வலது காதையும் அறுத்து எறிந்தார்.

இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே ஸ்டெபானியா துடிதுடித்து உயிரிழந்தார்.

அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த ஸ்டெபானியாவின் காதலன் அலெக்சி பாட்டீவ் (44) வீட்டுக்குள் வந்த போது அவர் நிர்வாணமாக இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கொலையாளி எலிசவேடா தப்பாமல் இருக்க அவரை கட்டி வைத்த அலெக்சி பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவரை கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி எலிசவேடா மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தாண்டு தொடக்கத்தில் அவருக்கு சிகிச்சைகள் முடிந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில் எலிசவேடா மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையில் இரண்டு சகோதரிகளுக்கும் நன்கு அறிமுகமான ஸ்டஸ் என்பவர் கூறுகையில், 13 ஆண்டுகள் சிறை என்பது மிகவும் அதிகம், தீர்ப்பில் பிழை இருப்பதாக கருதுகிறேன்.

எலிசவேடா குற்றமற்றவர் என நினைக்கிறேன், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்படும் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்