குடியிருப்பு பகுதியில் விழுந்து பயணிகளுடன் எரிந்து சாம்பலான விமானம்: உறைய வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி பயணிகளுடன் எரிந்த சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோமா நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

கோமா நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள பெனி நகருக்கு புறப்பட்ட பிஸி பீ நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் விழுந்து எரிந்து சாம்பலாகியுள்ளது. விமானத்தில் 16 பயணிகள் உட்பட 18 பேர் பயணித்தாக கூறப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளானதில் வீடுகளும் தீப்பிடித்து எரிந்ததால் தீயை அணைக்க அப்பகுதி மக்கள் கடுமையாக போராடியுள்ளனர். எனினும், தற்போது வரை விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

காங்கோவில் விமான விபத்துக்கள் ஒப்பீட்டளவில் அடிக்கடி நிகழ்கின்றன. நாட்டின் அனைத்து வர்த்தக விமானங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்