பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றியது இந்திய இராணுவம்?

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கை இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் பரவி வருவதின் உண்மை தன்மை வெளியாகியுள்ளது.

நேற்று முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான நீலம் பள்ளத்தாக்கில் இரு நாடுகளிடையே பதற்ற நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஓபந்தத்தை மீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா இராணுவம் கடுமைாய பதிலடி கொடுத்தன என இந்திய இராணுவம் தகவல் தெரிவித்ததாக மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் நீலம் பள்ளத்தாக்கில் உள்ள கெரன் கிராமத்தை இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், குறித்த தகவல் பொய் என இந்திய இராணுவம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதை திசை திருப்பும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளதா என பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்