அமெரிக்க வீரர்கள் வெளியேறாவிட்டால் சவப்பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுவீர்கள்- ஹசன் நஸ்ரல்லா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என லெபனான் போராளிக்குழுவின் தலைவர் ஹெஸ்பொல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்ட நிலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பேசிய ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதே நமது பதிலடியின் முதல் துவக்கமாகும்.

இது அமெரிக்க துருப்புக்கள் மத்திய கிழக்கிலிருந்து விலகுவதை உறுதி செய்யும்.

"அமெரிக்கர்கள் தங்கள் தளங்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் கப்பல்களை எங்கள் பிராந்தியத்திலிருந்து அகற்ற வேண்டும். அவர்கள் வெளியேற வேண்டும்," என்று அவர் கூறினார். தாக்குதல்கள் எந்தவிதமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை. முக்கியமாக சக்தியைக் காட்டியதாகத் தோன்றியது.

அமெரிக்க துருப்புக்கள் தாமாக முன்வந்து செல்லாவிட்டால் சவப்பெட்டிகளில் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறலாம் என்று பரிந்துரைத்தார்.

மேலும், குவாசிம் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நட்பு நாடுகள் ஒன்று செருமாறும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்