உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்திய நபர்கள் சிக்கினர்... வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

176 உயிரை பலிவாங்கிய உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈரான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, சில மணிநேரங்களில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 176 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு நாட்கள் நடந்த விசாரணைக்கு பின் நாங்கள் தான் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் ஐஆர்ஜிசி பொறுப்பேற்றுக்கொண்டது.

உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மன்னிக்க முடியாது தவறு என கூறிய ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், ஜனவரி 7 ம் திகதி ஈரானிய இராணுவத்தால் உக்ரேனிய பயணிகள் விமான் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாட்டின் நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெயிலி கூறியதாக மேற்கோளிட்டு உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள், அவர்கள் யார் என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லையாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்