ஈரான் திட்டமிட்டே உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது..! அமெரிக்கா ஊடகம் வெளியிட்ட அதிர வைக்கும் வீடியோ ஆதாரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

உக்ரேனிய பயணிக்ள விமானத்தை இரண்டு ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஏவுகணைகள் உக்ரேனிய விமானத்தை தாக்க வானத்தில் பாய்ந்து சென்று காட்சிகளையும் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த காட்சி ஈரானிய இராணுவ தளத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள பிட்கானே என்ற கிராமத்தில் உள்ள கூரையிலிருந்த பாதுகாப்பு கமெராவில் படமாக்கப்பட்டுள்ளன என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் ஏன் செயல்படவில்லை என்பதற்கான மர்மத்தையும் விளக்கயுள்ளது.

ஏவுகணைகள் 30 வினாடிகள் இடைவெளியில் சுடப்பட்டன, இது முதல் தாக்குதில் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் முடக்கப்பட்டது, இதனையடுத்து இரண்டாவது ஏவுகணை விமானத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் வேண்டுமென்றே திட்டமிட்டே தாக்குதலில் ஈடுபட்டதாக டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

விமானம் 2020 ஜனவரி 7ம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குறித்த சிசிடிவி காட்சியில் 17 அக்டோபர் 2019 என்ற திகதி உள்ளது, இதன் மூலம் வீடியோவின் உண்மை தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது.

உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புதன்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் இருந்த 176 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

விமானம் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை மற்றும் அடிப்படையில் மேற்கத்திய நாடுகளின் கூற்றுக்களை தெஹ்ரான் பல நாட்களாக மறுத்தது.

எனினும், சனிக்கிழமையன்று ஈரான் தளபதி ஜெனரல் அமிராலி ஹாஜிசாதே, ஏவுகணை ஆபரேட்டர் விமானத்தை ஏவுகணை என்று தவறாகக் கருதி தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார்.

செவ்வாயன்று தற்செயலான துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஈரான் தனது முதல் கைது நடவடக்கையை முன்னெத்துள்ளதாக அறிவித்தது, சுமார் 30 பேர் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்