இந்தியா.. வெயிட் பண்ணலாமா வேணாமா? சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழர் வெளியிட்ட உருக்கமான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஜப்பானின் யோக்கோஹமா துறைமுகத்தில் இருக்கும் டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலில் சிக்கியிருக்கும் மதுரைச் சேர்ந்த அன்பு, தற்போதைய நிலைமையை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் கொரோனா வைரஸால் 2 பேர் உயரிழந்துள்ள நிலையில் 634 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த அன்பு, கப்பலின் நிலைமையை விளக்கி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வணக்கம் நான் அன்பு பேசுகிறேன், நல்லா இருக்கீங்களா? லேட்டஸ்ட் அப்டேட், கப்பலில் என்ன நடக்கிறது என்று எல்லோரும் கேட்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கப்பல் குழு உறுப்பினர்கள் தயாராக இருங்கள், உங்களை மீட்க விமானம் வரப்போகிறது என இப்போது கப்பல் கேட்பன் அறிவித்தார்.

கப்பலிருந்து அமெரிக்கர்கள் சென்றுவிட்டனர், தென் கொரியர்கள் சென்றுவிட்டனர், அவுஸ்திரேலியர்கள், நியூசிலாந்தை நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளியேற போகின்றனர்.

இந்தியா எப்ப..? வெயிட் பண்ணலாமா வேணாமா.. பண்றத பண்ணுங்க.. மகிழ்ச்சி என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்