கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

COVID-19 கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் 370 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஐ எட்டியுள்ளது. இதனால் நிலவி வரும் நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த வடக்கில் 12 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸ் இன்று இரண்டாவது கொரோனா வைரஸ் மரணத்தை அறிவித்தது. இறந்த அந்த 60 வயதான நபர் சீனா அல்லது இத்தாலியில் இருந்து பயணம் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல ஸ்பெயின் மற்றும் குரோஷியாவில் அதிகமான வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரியா அதன் முதல் சந்தேகத்திற்குரிய மரணத்தை பதிவு செய்தது. உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒன்றைத் தொடர்பு கொண்ட 12 பேரை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இத்தாலியில் நேரத்தை செலவிட்ட பயணிகளில் சிலர் COVID-19 பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, ஆஸ்திரியா, குரோஷியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில் மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட 10 நாடுகள் உறுதி செய்துள்ளன.

உலகம் முழுவதும் COVID-19 வைரஸால் 81,000 க்கும் மேற்பட்ட பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையானது 2,800 ஐ நெருங்குகிறது.

இந்த நெருக்கடி நிலையின் காரணமாக ஐரோப்பாவில் சில நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

COVID-19 இன் பெரிய வெடிப்பு ஏற்பட்டால் பள்ளிகள், தேவாலயங்கள், சினிமாக்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளை மூடுவதற்கான திட்டங்களை வைத்திருப்பதாக கிரீஸ் அறிவித்துள்ளது.

டப்ளினில் இத்தாலியுடன் அயர்லாந்தின் சிக்ஸ் நேஷன்ஸ் அணி மோதும் போட்டியானது கொரோனா அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா முழுவதும் கொடிய வைரஸ் பரவுகிறது என்ற கவலையின் காரணமாக, திருவிழாவின் கடைசி முக்கிய நாளான நைஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடி தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ஐரோப்பிய ஆணையம் உறுப்பு நாடுகளின் தொற்றுநோய் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...