சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்... கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்: வெளியான வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரியாவில் ரஷ்யா முன்னெடுத்த வான்வெளி தாக்குதலில் துருக்கிய துருப்புகள் 33 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாழனன்று இரவு முன்னெடுக்கப்பட்ட குறித்த தாக்குதல் தொடர்பில் அரசு சார்பில் உறுதி செய்யப்பட்டதுடன்,

சிரியாவை ஆதரிக்கும் ரஷ்ய துருப்புகளே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துருக்கி சட்டவிரோதமாக ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை அனுப்பி தாக்குதலுக்கு தூண்டியதாக ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சிரியாவும் ரஷ்யாவும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ளது.

ரஷ்ய வான்வெளி தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 50-கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக துருக்கிய பிராந்திய ஆளுநர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரியா நிர்வாகம் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர்.

மேலும், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...