கொரோனாவால் கடும் நெருக்கடியை சந்திக்கும் முதல் 5 நாடுகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தற்போது வரை உலகின் 189 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, aமெரிகா, ஸ்பெயின், ஜேர்மனி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 321,271 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் 13,699 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் அதிக அளவில் பாதிப்புகளைச் சந்தித்துள்ள முதல் 5 நாடுகளின் விவரம்.

சீனா

கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் பரவிய சீனாவில் இதுவரை 81,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,261 பேர் பலியாகி உள்ளனர். 72 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இத்தாலி

சீனாவைத் தொடர்ந்து அதிகப்படியான பாதிப்பை ஐரோப்பிய நாடான இத்தாலி அடைந்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 53,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,825 பேர் பலியாகியுள்ளனர். 6,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 29,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 349 பேர் பலியாகியுள்ளனர். 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்பெயின்

ஸ்பெயினில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 28,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,756 பேர் பலியாகியுள்ளனர். 2,125 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா பாதிப்புக்கு 23,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் பலியாகியுள்ளனர். 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நாடுகளைத் தொடர்ந்து ஈரான், பிரான்ஸ், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா போன்ற நாடுகள் கொரோனா பாதிப்புக்கு கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்