கொரோனா வைரஸ் தொடர்பில்.... வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு சீனா வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழலில் சீனாவுக்கான வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவரும் சீனாவுக்கு திரும்ப வேண்டாம் எனவும்,

சீனாவில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடையே உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அமைச்சகம் அறிந்திருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில் தற்போது கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் தொடர்பில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்