கைப்பிடி முதல் கழிவறை வரை தங்கத்தால் இழைக்கப்பட்ட உலகின் முதல் ஹொட்டல்: எங்கு திறக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கைப்பிடி முதல் கழிவறை வரை முழுவதும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஹொட்டல் ஒன்று வியட்நாம் தலைநகரில் திறக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் தலைநகரான Hanoiயில் திறக்கப்பட்டுள்ள அந்த ஹொட்டலுக்கு The Dolce Hanoi Golden Lake ஹொட்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தங்க டைல்ஸ் பதித்த இந்த ஹொட்டலைக் கட்டி முடிக்க 11 ஆண்டுகள் பிடித்துள்ள நிலையில், உலகிலேயே இப்படி தங்கத்தால் இழைக்கப்பட்ட முதல் ஹொட்டல் இதுதான் என கருதப்படுகிறது.

400 அறைகள், 25 மாடிகள் கொண்ட இந்த ஹொட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு கட்டணமாக 250 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது.

அத்துடன், அந்த ஹொட்டலில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கான வாடகை, சதுர மீற்றர் ஒன்றிற்கு 5,200 பவுண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்