‘ஒவ்வொரு 15 விநாடிகளிலும் ஒருவர் பலி’.. 7 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய கொரோனா

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த அச்சத்திற்கு மத்தியல் உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 7,00,000-ஐ கடந்தது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ராய்ட்டர்ஸ் கணக்கெடுப்பின்படி, புதன்கிழமை கொரோனாவின் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 7,00,000-ஐத் தாண்டியுள்ளது.

அதிக இறப்புக்கள் பதிவான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோ ஆகியவை முன்னணியில் உள்ளன.

கடந்த இரண்டு வாரங்களின் தரவுகளின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் கணக்கீடுகளின்படி, கொரோனாவால் சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 5,900 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரு மணி நேரத்திற்கு 247 பேர் அல்லது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு நபர் கொரோனாவால் இறந்து கொண்டிருக்கிறார்கள் .

அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் கொரோனா தொற்றுநோயின் புதிய மையப்பகுதியாகும், மேலும் இரு பிராந்தியங்களும் வைரஸ் பரவுவதைத் தடுக்க போராடி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்