பாலத்தின்கீழ் இறந்து கிடந்த இளம்பெண்: அவரது வீட்டுக்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
753Shares

அயர்லாந்தில் பாலம் ஒன்றின் கீழ், 30 வயதுகளிலிருக்கும் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்ட பொலிசார் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

Lucan என்ற இடத்தில், பாலம் ஒன்றின் கீழ் இறந்து கிடந்த அந்த செவிலியரின் பெயர் Nicola Keane என்று தெரியவந்தது.

Nicolaவின் வீட்டுக்கதவை பொலிசார் தட்டியபோது, அவரது கணவர் தூக்கத்திலிருந்து எழுந்துவந்துள்ளார்.

அவரிடம் விவரத்தைக் கூறிய பொலிசார், அவரது வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது, அந்த வீட்டில் Nicolaவின் ஏழு மாதக் குழந்தையும் உயிரிழந்து கிடந்துள்ளதுடன், அது உயிரிழந்த விடயம் Nicolaவின் கணவருக்கும் தெரியாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

Image: DublinLive WS

இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை ஒரு குடும்பப் பிரச்சினையாக கருதும் பொலிசார், யார் மீதும் தங்களுக்கு சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளனர்.

வீட்டை சோதனையிட்ட தடயவியல் நிபுணர்களும், வன்முறை சம்பவம் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Image: DublinLive WS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்