விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் அத்துமீறி நடத்தப்பட்ட உடல் பரிசோதனை! வருத்தம் தெரிவித்துள்ள நாடு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
67Shares

கட்டார் விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை நடத்தியதற்கு அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள விமான நிலையத்தின் கழிவறையில் கடந்த 2ம் திகதி பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை மீட்கப்பட்டது.

அந்த குழந்தை யாருடையது என்பதை அறிய சர்ச்சைக்குரிய செயலை விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் செய்தனர்.

அதன்படி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் இருந்து பெண் பயணிகள் கீழே இறக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களில் யாருக்கேனும் அன்று குழந்தை பிறந்ததா என உடல் பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து விமான நிலையத்தில் நடந்த சர்ச்சை விடயத்துக்கு கட்டார் பிரதமர் ஷேக் காலித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்