தென் கொரியாவையும் விட்டுவைக்காத புதிய வகை வைரஸ்! 3 பேருக்கு தொற்று உறுதி

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
32Shares

அண்மையில் பிரித்தானியாவில் வெளிவந்த புதிய வகைக் கொரோனா வைரஸ், முதல்முறையாக தென் கொரியாவில் உள்ள 3 பேருக்கும் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று நபர்களும் லண்டனை சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் டிசம்பர் 22-ஆம் திகதி தென் கொரியாவுக்கு வந்தகாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஏஜெண்சி (KDCA) தெரிவித்துள்ளது.

கோவிட் -19 க்கு நேர்மறையான சோதனை வந்ததிலிருந்து அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கே.டி.சி.ஏ தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இந்த மாத தொடக்கத்தில் பிரித்தானியாவில் தோன்றியது மற்றும் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளையும், கனடா, ஜோர்டான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் அதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மிகவும் தொற்றக்கூடியது என வல்லுநர்கள் அஞ்சும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட நாடுகளை பிரித்தானியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தூண்டியது.

அவற்றில் தென் கொரியா ஒன்றாக இருந்தது, இந்த ஆண்டு இறுதி வரை பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் வர தடை விதித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பிரித்தானியய்யாவிலிருந்து இருந்து நாடு திரும்பிய தென் கொரிய மனிதருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் புதிய வகை பாதிப்பாக இருக்குமா என சோதனை செய்ய, தென் கொரிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

தென் கொரியாவின் தலைநகரமான சியோல் பகுதியை மையமாகக் கொண்ட ஒரு எழுச்சி, கடுமையான சமுருக இடைவெளி நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் இந்த மாதத்தில் பலமுறை தினசரி பாதிப்புகள் 1,000த்தை தாண்டியதால், அந்நாட்டில் வைரஸின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்