விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமானி எப்படி இருந்தார்? மருமகன் கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
7308Shares

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் விமானி, ஏறுவதற்கு முன்பு அலங்கோலமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jakarta-விலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் Pontianak புறப்பட்ட Sriwijaya Air flight SJ182 போயிங் விமானம், சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது

தற்போது விமானத்தின் சிதறிய பாகங்கள் துண்டு துண்டுகளாக கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 50 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள்.

விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால், தேடுதலின் போது சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடையாளம் காண உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் மற்றும் டிஎன்ஏ-க்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது 54 வயதான விமானி Afwan என்பவர், இவர் முன்னாள் விமானப்படை விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக மிகவும் நேர்த்தியாக பணிக்கு செல்லும் Afwan, சம்பவத்தன்று விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு, அவரது சட்டை சலவை செய்யப்படவில்லை, என்று புகார் கூறியதாக அவரது மருமகன் Ferza Mahardhika கூறினார்.

மீண்டும் அவர்களை பிரிந்து பணிக்கு செல்வதற்காக தனது மூன்று குழந்தைகளிடம் Afwan மன்னிப்பு கேட்டார் என Ferza Mahardhika கூறினார்.

மேற்கு ஜாவா நகரமான Bogor-ல் விசிக்கும் Afwan, தனது சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கு உதவ விரும்பும் கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்லீம் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.

அவர் ஒரு நல்ல மனிதர். அவர் அடிக்கடி அறிவுரைகள், புத்திசாலித்தனமான ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் தனது சுற்றுப்புறத்தில் முக்கிய நபராக இருந்தார், மேலும் அவரது உதவு குணத்திற்கு நன்கு அறியப்பட்டவர் என்று அவரது மருமகன் கூறினார்.

இந்த விபத்து செய்தி கேட்டு நான் அதிர்ந்துபோனேன், இதை என்னால் நம்ப முடியவில்லை. தயவுசெய்து மாமாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று Ferza Mahardhika கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்