ரியோ ஒலிம்பிக்: பதக்கப்பட்டியலில் சீனாவை ஓரங்கட்டிய பிரித்தானியா

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

26 தங்கம், 23 வெள்ளி, 26 வெண்கலம் என அமெரிக்கா 75 பதக்கங்களுடன் உச்சத்தில் உள்ளது.

முன்னதாக முதல் இடம் பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீனாவுக்கு தற்போது இரண்டாம் இடத்துக்கே போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது சீனா 15 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம் பிரித்தானியா 16 தங்கம், 17 வெள்ளி, 8 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதக்கப்பட்டியல் விவரம்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments