பி.வி.சிந்து, ஜித்து ராய், சாக்ஷி மாலிக், தீபா கர்மாகருவுக்கு கேல் ரத்னா விருது

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
352Shares
352Shares
lankasrimarket.com

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுபோல துரோணாச்சாரியார், அர்ஜுனா மற்றும் தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

துரோணாச்சாரியார் விருது: தடகள பயிற்சியாளர் ரமேஷ், நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப் குமார், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர்மால் தயாள், மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர் சிங்,கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி.

அர்ஜுனா விருது: வில்வித்தை வீரர் ராஜத் சவ்கான், தடகள வீராங்கனை லலிதா பாபர், மாற்றுத் திறனாளி தடகள வீரர் சந்தீப் சிங் மான், கிரிக்கெட் வீரர் ரஹானே.

தயான்சந்த் விருது: ஹாக்கி வீரர் சில்வானாஸ், துடுப்பு படகு வீரர் ராஜேந்திரா, தடகள வீராங்கனை சாத்தி சீதா.

ஆகஸ்ட் 29ம் திகதி குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி விருதுகளை வழங்குகிறார். ராஜீவ் கேல் ரத்னா விருது பெறுவோருக்கு ரூபாய் 7.5 லட்சமும், துரோணாச்சாரியார், அர்ஜுனா விருது பெறுவோருக்கு ரூபாய் 5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments