ரேஸில் பற்றி எரிந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய பிரபல வீரர்கள்

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
95Shares
95Shares
ibctamil.com

மொனாகோ கார் ரேஸில் பாய்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் மொனாகோவில் பிரபல கார் பந்தய வீரர்கள் கிறிஸ் ஹாரிஸ்(43) மற்றும் எடி ஜார்டன்(69) பங்குபெற்ற கார் ரேஸ் போட்டி நடைபெற்றுள்ளது.

மலைப் பகுதியில் நடைபெற்ற இந்த ரேஸ் தொடங்கிய சிறிது நேரத்தில், கிறிஸ் இயக்கிய Renault Alpine A110 ரக கார் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

தீ பற்றி எரிய தொடங்கியவுடன் வீரர்கள் கீழே குதித்து தப்பித்துள்ள நிலையில் 4 நிமிடத்தில் கார் சாம்பலாகியுள்ளது.

அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பற்றி எரிந்த ரெனால்ட் காரின் மதிப்பு £50,000 பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்