தமிழில் மகளிர் தின வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மகளிர் தினத்தையொட்டி தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், மகளிர் தினத்திற்கு தனது வாழ்த்துக்களை அவர் தமிழில் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்னையும் அவளே, சகோதரியும் அவளே, தோழியும் அவளே, மனைவியும் அவளே, மகளும் அவளே, உலகில் உள்ள அனைத்து உறவுகளின் அடிப்படையும் அவளே.

பெண்ணாகப் பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். பெண்மையை போற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers