யுவராஜ் சிங்குக்கு பதிலாக களமிறங்கிய அன்று.. எல்லாமே முடிந்துவிட்டதாக... கோஹ்லி உருக்கம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்குக்கு மாற்று வீரராக களமிறங்கியது குறித்து, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் பலரை கவலையில் ஆழ்த்தியது.

இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி அனுபவம் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘2009யில் பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், யுவ்ராஜ் சிங்குக்கு மாற்று வீரராக நான் களமிறங்கி மோசமான முறையில் ஆட்டமிழக்க நேரிட்டபோது, எனக்கு எல்லாமே முடிந்துவிட்டதாக தோன்றியது. அடுத்த நாள் காலை வரை எனக்கு தூக்கமே வரவில்லை’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்