பொலிஸ் உடையில் மிரட்டும் விராட் கோஹ்லியின் வீடியோ!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விளம்பரம் படம் ஒன்றில் பொலிஸ் உடையில் மிரட்டியுள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான, தர்மசாலாவில் நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி மழையால் ரத்தானது.

அடுத்த போட்டி மொஹாலியில் நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி விளம்பர படம் ஒன்றில் நடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்டின் தொலைக்காட்சி விற்பனை குறித்த அந்த விளம்பரத்தில், கோஹ்லி பொலிஸ் உடையணிந்து குற்றவாளியை முறைத்து பார்ப்பது போல் மிரட்டலாக நடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்