என் வாழ்நாளில் மறக்கமுடியாதது இவர்கள் தான்... டோனிக்கு புகழாரம் சூட்டிய ரஷீத் கான்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து நட்சத்திரம் ரஷீத் கான், தான் எடுத்து மறக்கமுடியாத விக்கெட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

டி-20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ள ரஷீத் தான், 2017ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தனது சுழற் பந்தால் பல முன்னனி வீரர்களை திணறடித்து வருகிறார் ரஷீத்.

இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ரஷீத், அதில், ரசிகர் ஒருவர் மறக்கமுடியாத விக்கெட் ஏது என கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஷீத், ஐபிஎல் தொடரில் டோனி மற்றும் கோஹ்லி விக்கெட்டுகளை கைப்பற்றியது என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் டோனி குறித்த உங்களின் அபிப்ராயம் என கேள்வி எழுப்பினர். கூலான, அமைதியான சிறந்த மேட்ச் பினிசர் மற்றும் மிக முக்கியமாக சிறந்த ஆளுமை கொண்டவர் என ரஷீத் புகழாரம் சூட்டினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்