அவமானமாக உள்ளது! இவர்கள் தான் நாட்டின் உண்மையான வைரஸ்... கொந்தளித்த பிரபல கிரிக்கெட் வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கொரோனா வைரஸ் அச்சத்தை பயன்படுத்தி தன் நாட்டில் நடக்கும் அநியாயத்தை கண்டு வங்கதேச கிரிக்கெட் வீரர் கொந்தளித்துள்ளார்.

வங்கதேச வியாபாரிகள் சிலர் நோய்த் தொற்று அபாயத்தையும், அதை ஒட்டி அரசு ஊரடங்கு கட்டுப்பாடு விதித்து வருவதையும் வைத்து விலைவாசியை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார் ரூபல் ஹுசைன்.

அவர்கள் மனிதமற்ற பேராசை பிடித்தவர்கள் என கடுமையாக சாடி உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் சானிடைசர் மற்றும் மருத்துவ முகக் கவசம் ஆகியவற்றில் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அரசுகள் எச்சரித்தும் சிலர் அதன் விலையை அதிகரித்து விற்கின்றனர்.

வங்கதேச நாட்டில் அதையும் தாண்டி மளிகைப் பொருட்களின் விலையையும் அநியாய விலைக்கு விற்பதை கண்டு பொங்கி உள்ளார் ரூபல் ஹுசைன்.

மேலும், நாம் பேராசை பிடித்த மோசமான நாட்டில் இருக்கிறோம். சீனாவில் ஏற்பட்ட மோசமான பாதிப்பால் அவர்கள் நாட்டில் முகக் கவசம் விலை குறைக்கப்பட்டது. ஏனெனில், அவர்கள் மனிதர்கள்.

வங்கதேசத்தில் 5 டாகா (வங்கதேச பணம்) முகக் கவசம் 50 டாகாவிற்கும், 20 டாகா மதிப்பு கொண்ட முகக் கவசம், 100 / 150 டாகாவிற்கும் விற்கப்படுகிறது. ஏனெனில், நாம் மனிதத்தன்மை அற்ற பேராசை பிடித்தவர்கள் என கூறி உள்ளார்.

இதோடு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அந்த பேராசை பிடித்த வியாபாரிகளை நினைத்து அவமானமாக உள்ளது. அவர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான வைரஸ் எனவும் கடுமையாக திட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்