என் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டேன்! அதிரடியாக அறிவித்துள்ள பிரபல இளம் வீராங்கனை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கால்பந்தாட்ட வீரர் மாட் டூமுவாவுடனான 4 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள எல்லீஸ் பெர்ரி மற்றும் மாட் டூமுவா, இந்த முடிவு இருவரும் கலந்தாலோசித்து எடுத்தது என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களது மணமுறிவு குறித்து இந்த ஆண்டின் துவக்கத்திலேயே பேச்சு அடிபட்ட நிலையில் இருவரும் அதை மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கால்பந்தாட்ட வீரர் மாட் டூமுவாவுடனான நான்கு வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் கூட்டாக தங்களது மணமுறிவை அறிவித்துள்ளனர்.

மெல்போர்ன் ரிபல்ஸ் அணிக்காக கால்பந்தாட்டம் ஆடி வருகிறார் மாட் டூமுவா. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இவர்களது மணமுறிவு குறித்து பேச்சு அடிப்பட்டது. இதை இருவரும் மறுத்து வந்தனர்.

ஆயினும் மெல்போர்னில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் நிகழ்ச்சியில் பெலின்டா கிளார்க் விருதை பெறவந்த எல்லீஸ், திருமண மோதிரம் அணியாமல் வந்ததும், மேடையில் தன்னுடைய கணவர் குறித்து எதுவும் பேசாததும் விவாதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்