மருத்துவமனையில் கங்குலி... தற்போதைய நிலை என்ன? மருத்துவர்கள் விளக்கம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
334Shares

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார் என்று உட்லாண்ட்ஸ் மருத்துவமனை மருத்துவர் அஃதாப் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேசிய மருத்துவர் அஃதாப் கான், சௌரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவர் தற்போது சீராக உள்ளார். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார்.

அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை என மருத்துவர் அஃதாப் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்