யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வீராங்கனை உஸ்பெகிஸ்தான் பயணம்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இளையோருக்கான ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனை ஆசிகாவும் இடம்பிடித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்தத்

தொடர் உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது.

பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனை ஆசிகா இலங்கை சார்பில் பங்குபற்றும் பிற வீரர்களுடன் சேர்ந்து உஸ்பெகிஸ்தான் பயணமாகியுள்ளார்.

முதல் ஆறு இடங்களுக்குள் வரும் வீரர்கள், வீராங்கனைகள் இளையோர் ஒலிம்பிக் தொடருக்கும் தகுதிபெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers