கடவுச்சொல் இன்றி மற்றொருவரின் மின்னஞ்சலை பார்வையிடுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மின்னஞ்சல் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது கடவுச் சொற்களை மிகவும் பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டும்.

தமது கடவுச் சொற்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அனேகமானவர்கள் விரும்பமாட்டார்கள்.

எனினும் சிலர் நம்பிக்கையின் அடிப்படையில் கடவுச் சொற்களை பகிர்ந்துகொள்வார்கள்.

எனினும் ஒருவருடைய மின்னஞ்சல்களை கடவுச் சொல் இன்றியே மற்றொருவர் கையாள முடியும்.

இதற்கு ஒரு முறை மட்டும் மற்றையவரின் அனுமதி வேண்டும்.அதன் பின்னர் தொடர்ச்சியாக அவரின் மின்னஞ்சல்களை வாசிக்கவோ அல்லது அழிக்கவோ முடியும்.

இவ் வசதி ஜிமெயில் சேவையில் தரப்பட்டுள்ள போதிலும் மற்றையவருடைய மின்னஞ்சல் வேறொரு சேவை வழங்குனருடையதாகவும் இருக்கலாம்.

அதாவது Yahoo, AOL, Hotmail, POP3 கணக்குகளை உடையதாகவும் இருக்கலாம்.

இவ் வசதியினை செயற்படுத்துவதற்கான படிமுறைகள் வீடியோவில் தரப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்