கூகுள் புகைப்படங்களில் தரப்படவுள்ள புதிய மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று எந்தவொரு தகவலையும் பெறக்கூடிய ஒரே இடமாக கூகுள் காணப்படுகின்றது.

இங்கு ஏராளமான புகைப்படங்களையும பெறக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வாறு தரப்பட்டுள்ள புகைப்படங்களில் மேலும் சில வசதிகளை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கூகுளில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் வியாபார நோக்கங்களிற்காக பயன்படுத்த முடியாது.

காரணம் அவற்றில் பல காப்புரிமை கொண்ட புகைப்படங்களாக இருக்கின்றன.

எனவே புதிய வசதியின் மூலம் காப்புரிமை உடைய புகைப்படங்களை வித்தியாசப்படுத்தி பயனர்களுக்கு காண்பிக்க கூகுள் எதிர்பார்த்துள்ளது.

இதற்காக விசேட குறியீடு (Badge) ஒன்றினைப் பயன்படுத்தவுள்ளது.

அதேபோன்று காப்புரிமை தொடர்பில் குறிப்புக்களை கொண்ட புகைப்படங்களை தனியாக வடித்து (Filter) எடுப்பதற்குரிய வசதியும் இதனுடன் தரப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்