ஜிமெயிலில் கூகுள் அறிமுகம் செய்துள்ள மற்றுமொரு வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
145Shares

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையான கூகுள் ட்ரைவ் பரீட்சையமான ஒன்றே.

இங்கு பதிவேற்றப்படும் கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் இருக்கின்றமை தெரிந்ததே.

எனினும் இவ்வாறு பகிர்வதற்கு கூகுள் ட்ரைவ் சேவையினுள் நிச்சியம் லொக்கின் செய்ய வேண்டும்.

ஆனால் தற்போது ஜிமெயிலில் இருந்தவாறே கூகுள் ட்ரைவ் கோப்புக்களை தேவையானவர்களுக்கு மாத்திரம் பகிர்ந்துகொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது இதற்கு முன்னர் பகிரப்பட வேண்டியவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கூகுள் ட்ரைவில் உள்ள குறித்த கோப்பிற்கு வழங்க வேண்டும்.

மாறாக தற்போது மின்னஞ்சல் அனுப்பும்போதே குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு கூகுள் ட்ரைவில் உள்ள கோப்பு ஒன்றினை கையாளக்கூடிய அனுமதியை வழங்க முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்