குளிர் பிரதேசங்களில் உடலிற்கு வெப்பத்தை வழங்கக்கூடிய ஜக்கட் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
139Shares

குளிரான தருணங்களில் அதனை தாங்குவது என்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும்.

இவ்வாறான நிலையில் ஹீட்டர்கள் போன்ற உபரணங்களை பயன்படுத்துதல் மற்றும் நெருப்பு எரித்து குளிர் காய்தல் என்பன பின்பற்றப்பட்டு வருகின்றன.

எனினும் இவை பயணங்களின்போது சாத்தியப்படாது.

எனவே இதற்கு தீர்வாக ZeroRay எனும் வெப்பத்தை தரக்கூடிய ஜக்கட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கார்பன் நனோ தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜக்கட்டினை துவைத்து துவைத்து பயன்படுத்தவும் முடியும்.

நீர் ஊடுபுகவிடாத இந்த ஜக்கட்டில் 4 வகையான வெப்பநிலை மாற்றப்படிகள் காணப்படுகின்றன.

வெறும் ஒரு செக்கன்களிலேயே குறித்த வெப்பநிலைகளை அடையக்கூடிய தொழில்நுட்பம் இந்த ஜக்கட்டில் தரப்பட்டுள்ளது.

6 லேயர்களைக் கொண்டு இந்த ஜக்கட் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும் எடையானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதன் வெப்பநிலை படிகள்,

  • Low – white LED, 100.4 ± 37.4°F / 38 ± 3°C
  • Medium -green LED, 109.4 ± 37.4°F / 43 ± 3°C
  • Medium High -purple LED, 118.4 ± 37.4°F / 48 ± 3°C
  • High – red LED, 127.4 ± 37.4°F / 53 ± 3°C

எனும் 4 வகைகளில் தரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்