பயனர்களுக்கு யூடியூப் விடுக்கும் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
247Shares

முன்னணி வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.

இந்த தளத்தினை நாள்தோறும் பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருவதுடன் பல்வேறு வகையான வீடியோக்களையும் பதிவேற்றி வருகின்றனர்.

இதனால் சில சமயங்களில் வீடியோவின் அடிப்படையில் தாக்கி பின்னூட்டல்கள் இடுவதும் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான பின்னூட்டல்களை இடுபவர்களுக்கே யூடியூப் நிறுவனம் எச்சரிக்கை விடுக்கவுள்ளது.

அதாவது பொப் அப் விண்டோ ஒன்றின் மூலம் குறித்த பின்னூட்டலை தொடர விரும்புகிறீர்களா என கேட்கும்.

ஆம் எனின் Post Anyway என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வாறில்லாவிடில் Edit என்பதை கிளிக் செய்து நாகரிகமான முறையில் பின்னூட்டலை மாற்றியமைக்கவும் முடியும்.

எனினும் இவ் எச்சரிக்கை செய்தியையும் தாண்டி தவறான பின்னூட்டல்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் எதிர்காலத்தில் குறித்த நபர்களின் யூடியூப் பயனர் கணக்கு முடக்கப்படக்கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்