கருப்பையில் பனிக்குடம் எப்படி உடைகின்றது தெரியுமா?

Report Print Kavitha in கர்ப்பம்

கருவில் இருக்கும் குழந்தையை சுற்றி சவ்வு திரவம் நிறைந்த பை இருக்கும். இதனை பனிக்குடப்பை என்றும் அழைப்பர்.

அது கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் (Amniotic fluid) என்ற திரவம் அமுக்க விசைகளில் இருந்து குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது.

கருவுற்ற 34ஆவது வாரம், இந்த பனிக்குடப்பை திரவத்தின் அளவாக 800 மில்லி இருந்து படிப்படியாக குறைந்து 600 மில்லியாக 40ஆவது வாரத்தில் இருக்கிறது. இந்த திரவம் ஒரே நிலையில் விழுங்கப்பட, குழந்தை வெளியேற்றத்துக்கும் உதவுகிறது.

பிரசவ நிலையை எட்டும் பெண்களுக்கு பனிக்குடம் சிதைவடைகிறது. இதனால் பிறப்புறுப்பின் வழியாக துளித்துளி நீராய் வெளியேற, கொஞ்சமாக கசியவும் தொடங்குகிறது.

எப்போழுது உடையும்?

முழு பிரசவ நிலைக்கு முன்னர் அல்லது 37 வாரங்களுக்கு பிறகு பனிக்குடம் உடைந்தால் அது தான் குறைப்பிரசவம் எனப்படுகிறது.

அளவுக்கதிகமான திரவம் சேர்தல் அல்லது கருப்பையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் பனிக்குடம் சீக்கிரம் உடைய வாய்ப்பிருக்கிறது.

இதன் அறிகுறிகள் :

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர் வெளியேறுதல்).

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

எப்படி கண்டறிவது?

  • சிறுநீர்ப்பையில் எதுவும் இல்லாதது போல் ஒரு உணர்வு தோன்றும்.

  • ஒருவேளை நிறமற்று, துர்நாற்றம் அற்று இருந்தால் பனிக்குடப்பை நீர் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் இடுப்பு தசையை இறுக்கி பார்க்கும் போது அந்த திரவம் நிற்காமல் வெளியானால் பனிக்குடம் உடைந்திருக்கிறது என அர்த்தம்.

  • பனிக்குடம் உடையும்போது நீருடன் சேர்த்து இரத்தமும் வெளியாகும்.

  • பனிக்குடம் உடைந்தால் காய்ச்சல் அல்லது உங்கள் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்