செவ்வாயின் தூசு மண்டலம் எங்கிருந்து தோன்றுகிறது?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
216Shares
216Shares
ibctamil.com

அண்மையில் செவ்வாயில் நீருள்ளது என்ற கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. ஆயினும் அதன் மேற்பரப்பு உலர்வாக, அழுக்காக உள்ளது. அதேநேரம் எப்பொழுதும் தூசு மண்டலத்தைக் கொண்டுள்ளது.

தற்போது அது எங்கிருந்து உருவாகின்றது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயானது பாறைப் பிரதேசம். புவியில் தூசுக்கள் பாறைகளிலிருந்து வளி, நீரருவி, பனிப்பாறைகளின் அசைவு மற்றும் எரிமலை வெடிப்புக்கள் மூலம் ஏற்படும் அரிப்புக்கள் மூலம் பாறைகளிலிருந்து தூசுக்கள் உருவாகிறது, ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் செவ்வாயில் அரிது

இன்னொரு நிகழ்வு, அது விண்கற்களின் தாக்கம். இதன் விளைவாக பெரிய பெரிய துணிக்கைகளே உருவாகின்றன.

செவ்வாயில் எவ்வாறு அவ்வாறான தூசுக்கள் உருவாகின்றன. காரணம் மேலேயுள்ள எந்தவொரு செயற்பாடும் அங்கு நடக்கச் சாத்தியமில்லை.

தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது. இதற்குப் பின்னால் மர்த்துக்குரிய ஒரு தரைத்தோற்ற வலயம் இருப்பதை ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இதிலிருந்து கிட்டத்தட்ட 3 திரில்லியன் கிலோகிராம் தூசுக்கள் இடம்மாற்றப்படுகிறது. இது பெருமளவான தூசுக்கள். விஞ்ஞானிகள் இது Medusae Fossae Formation இலிருந்தே உருவாவதாக நம்புகின்றனர்.

இது படிப்படியாக அரிப்படைந்து அக்கோளை மாசுறச் செய்வதாகக் கூறப்படுகிறது, இது எரிமலை உற்பத்தி வகையைச் சார்ந்தது.

சூரியத்தொகுதியிலுள்ளதிலும் இதுவே பெரியது எனவும் சொல்லப்படுகிறது. இது பெரியது எனினும் அதன் துளைகள் காரணமாக திணிவு குறைவு. இதனால் இலகுவில் அரிப்படையக்கூடியது எனவும் கூறப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்