விண்ணிற்கு பாய்ந்தது நாசாவின் லேசர் விண்கலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
97Shares
97Shares
ibctamil.com

புவியின் பனிக்கட்டிப் படைகளின் தன்மையை ஆராய அமெரிக்கா தனது லேசர் விண்கலத்தினை விண்ணில் ஏவியுள்ளது.

ICESat-2 என அழைக்கப்படும் இச் சாட்டலைட் நடவடிக்கையானது, அதிகரித்துவரும் பூகோள வெப்பநிலை காரணமாக உறைநிலையிலுள்ள பனிக்கட்டிகளில் எவ்வகையான மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறியும் நோக்கிலேயே செயற்படுத்தப்பட்டுள்ளது.

இது புவிக்கு மேலே 500 கிலோ மீற்றர்கள் தூரத்தில் புவியை வலம்வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டில் இதன் ஆரம்ப விண்கலம் விண்ணில் ஏவப்பட்டிருந்தது.

ஆயினும் தொழில்நுட்ப தடங்கல்கள் காரணமாக அதன் தொழிற்பாடு பாதிக்கப்பட்டு வருடத்திற்கு 2 மாதங்கள் என்றவாறு அதன் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்