விசேட ஆடை அணிந்த நாய் ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்

Report Print Balamanuvelan in விஞ்ஞானம்

நூற்றுக்கணக்கான வருடங்களாக மனிதர்களும், நாய்களும் ஒருங்கிணைந்த வாழ்வைப் பின்பற்றி வருகின்றன.

வேட்டையாடுதல், காவல் செய்தல், மோப்பம் பிடித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இவ்வாறான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானிலுள்ள Tohoku பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நவீன நாய் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு மின்விளக்கு, கமெராவுடன் கூடிய விசேட ஆடை ஒன்றை அணிவித்துள்ளனர்.

இவற்றின் உதவியுடன் எந்த இடத்தை சென்றடைய வேண்டும் என்பதை ரோபோ அறிந்துகொள்கின்றது.

பரிசோதனை முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகரமாக செயற்பட்டு விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த நாய் ரோபோ.

விரைவில் ஆய்வுகள் மற்றும் தேடல்கள் என்பவற்றில் இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers